Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

யாழில் ஜனாதிபதி அநுர: வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

T

The Leader Desk

ஜனவரி 31, 2025 • 6:58 AM

யாழில் ஜனாதிபதி அநுர: வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அமைதியாக போராட முடியும் என கூறி, போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறிய மன்று தடைகோரிய மனுவை நிராகரித்திருந்தது.
  • குறித்த போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி யாழ்.
எழுத்து அளவு:

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்

இதன்போது மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு அருகில் தமக்கு வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அமைதியாக போராட முடியும் என கூறி, போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறிய மன்று தடைகோரிய மனுவை நிராகரித்திருந்தது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று நடைபெற்று வருகிறது. 

அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், துணைக்கள தலைவர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் வழமைக்கு மாறான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, மேலும் பல பொதுக் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...