Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்: ரூ. 31 பில்லியன் தேவை

T

The Leader Desk

நவம்பர் 20, 2023 • 5:00 AM

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்: ரூ. 31 பில்லியன் தேவை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதேவேளை, எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போன்றன அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் உறுதியளித்துள்ளார்.
  • இந்நிலையில், குறித்த தேர்தல்களை நடத்துவதற்கு 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • எனினும், இந்த ஆண்டில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்திருந்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.
  • இதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருப்பதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

இதேவேளை, எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போன்றன அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த தேர்தல்களை நடத்துவதற்கு 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றை நடத்த குறித்த நிதி தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டு்ள்ளார்.

எனினும், இந்த ஆண்டில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்திருந்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலம் நிறைவடைய இரண்டு மாதங்கள் உள்ள காலப்பகுதியில், இந்நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியின் பதவிக்காலம் இரண்டரை வருடங்களை கடந்ததை தொடர்ந்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாமென அவர் கூறியுள்ளார்.

இதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருப்பதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேர்தல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்றும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போன்றன அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அவர் வாய் திறக்கவில்லை.

எனினும், 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலும் அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று முன்னர் தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2025ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்று ஜனாதிபதியும் எதுவும் தெரிவித்திருக்கவில்லை. இதேவேளை, எந்தத் தேர்தல் நடந்தாலும் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இருக்கும் என்று பிரதமர் தினேஷ் மேலும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்: ரூ. 31 பில்லியன் தேவை | Tamil Leader | We Lead the Nation