Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!

T

The Leader Desk

ஜூலை 30, 2025 • 1:34 PM

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்துக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி, இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட 27 பேர் அடங்குவர்.
  • சமூக ஆர்வலர் அமானி ரிஷாட் ஹமீத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
எழுத்து அளவு:

அரசாங்கத்துக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி, இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் அமானி ரிஷாட் ஹமீத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட 27 பேர் அடங்குவர்.

மனுவின்படி, இந்த விவகாரம் தொடர்பான இரண்டு அமைச்சரவை முடிவுகள் ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாகவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், இலங்கை பிரஜைகளின் உயிரியல் தரவுகள் (biometric data) மற்றும் தனிப்பட்ட தகவல்களை இந்தியா அணுக முடியும் என்றும், இதன் மூலம் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது இலங்கையின் இறையாண்மை, தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் ஒரு வெளிநாட்டு அரசு தலையிட வாய்ப்பளிக்கும் என்று கூறப்பட்டுள்ளதோடு , இது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை செல்லாததாக்க உத்தரவு பிறப்பிக்கவும், இந்த டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்துவதைத் தடுக்கவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...