Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சீனித் தொழிற்சாலை ஊழியர்களுக்கு 9 மாதங்களாக EPF வழங்கவில்லை!

T

The Leader Desk

ஜூலை 30, 2025 • 3:13 AM

சீனித் தொழிற்சாலை ஊழியர்களுக்கு 9 மாதங்களாக EPF வழங்கவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விசேட கூற்றொன்றை முன்வைத்து நேற்று (29) விசேட கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
  • பெல்வத்த சீனி உற்பத்தி தொழிற்சாலை கடந்த 9 மாதங்களாக EPF தொகையைச் செலுத்தவில்லை.
  • இவ்வாறு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.3240 இலட்சமாகும்.
  • இதன் காரணமாக, 3 மாதங்களுக்கு ரூ.230 இலட்சம் EPF மிகை ஊதியத்தைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

நிறுவனங்களாகும். இவ்வாறு காணப்பட்ட போதிலும், இந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இந்த இரண்டு நிறுவனங்களும் நாளுக்கு நாள் வீழ்ச்சியை கண்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து நேற்று (29) விசேட கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பெல்வத்த சீனி உற்பத்தி தொழிற்சாலை கடந்த 9 மாதங்களாக EPF தொகையைச் செலுத்தவில்லை. இவ்வாறு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.3240 இலட்சமாகும்.

இதன் காரணமாக, 3 மாதங்களுக்கு ரூ.230 இலட்சம் EPF மிகை ஊதியத்தைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளன. 2024 ஆகஸ்ட் இல் இலங்கை வங்கியிலிருந்து ரூ. 5000 இலட்சம் கடன் பெறப்பட்டுள்ளது. 2024 நவம்பரில் ரூ.10000 இலட்சம் கடன் பெறப்பட்டுள்ளது, அண்மையில் மற்றுமொரு கடனையும் பெற்று சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இத்தருணம் வரை விவசாயிகளுக்கு ரூ. 3,000 இலட்சங்களையும், விநியோகஸ்தர்களுக்கு ரூ. 4000 இலட்சங்களையும் செலுத்த வேண்டியுள்ளது. பெல்வத்த நிறுவனத்தில் 3,795 பேர் பணியாற்றுகின்றனர்.

இதன் மூலம் சுமார் 5,700 விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். பெல்வத்த சீனி உற்பத்தி தொழிற்சாலையின் நிலை இவ்வாறு தான் காணப்படுகிறது.

செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலையின் நிலைமையை நோக்கும் போது ரூ.2050 இலட்சத்தை விவசாயிகளுக்கு செலுத்த வேண்டி காணப்படுகின்றன.

ரூ.150 இலட்சமளவில் EPF கொடுப்பனவுகள் செலுத்தப்படவில்லை. விநியோகஸ்தர்களுக்கு ரூ.1000 இலட்சம் செலுத்த வேண்டி காணப்படுகின்றன. VAT வரியாக ரூ.4000 இலட்சமும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டி காணப்படுகின்றன.

இங்கு 1300 ஊழியர்கள் காணப்படுகின்றனர். கிட்டத்தட்ட 3900 விவசாயிகள் இந்த செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலையின் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அவ்வாறே இலங்கை வங்கிக்கு 2000 இலட்சம் ரூபா கடனையும் இந்த செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலை செலுத்த வேண்டி காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக, இந்த இரண்டு நிறுவனங்களும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போது, கிடைக்கும் பதில் தான் எந்தப் பிரச்சினையும் இல்லை, இந்த நிறுவனங்கள் நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்பதாகும்.

இந்த கட்டத்தில், இந்த இரண்டு நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலம் குறித்து பிரச்சினை உருவெடுத்து காணப்படுகின்றன.

வினைதிறனற்ற அரச நிர்வாகத்தின் கீழ் இந்த இரண்டு நிறுவனங்களும் நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்காமல், பெல்வத்த, செவனகல இந்த இரண்டு நிறுவனங்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தையும், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

எடுக்க முடியுமான சரியான தீர்மனத்தை எடுங்கள். இந்த இரண்டு நிறுவனங்களின் பாதுகாப்பிற்காகவும், விவசாயிகள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காகவும் அவர்களினது உரிமைகளுக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக நானும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் தொடர்ச்சியாக முன்நிற்போம்.

இந்த இரு நிறுவனங்களையும் பாதுகாத்தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...