Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது குழந்தை பஸ்ஸில் மோதி பலி!

T

The Leader Desk

மே 30, 2025 • 3:31 PM

ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது குழந்தை பஸ்ஸில் மோதி பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வயது ஆண் குழந்தையொன்று, அவ்வழியாகப் பயணித்த பஸ் ஒன்றில் மோதுண்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
  • இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய், இன்று (30) பிற்பகல் 1.30 மணியளவில், தனது சகோதரியின் மகளுக்கு காது குத்துவதற்காக, மாலமுல்லா பகுதியில் உள்ள ஒரு விகாரைக்குச் சென்றுள்ளார்.
  • இதற்காக, அந்தத் தாய், அவரது சகோதரி, 3 வயதுச் சிறுவன், அச்சிறுவனின் 10 வயதுச் சகோதரன் மற்றும் காது குத்துவதற்காகக் காத்திருந்த சிறுமி ஆகியோர், முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.
  • இதன்போது, பாணந்துறையின் ருக்கஹா பகுதியில் பயணிகள் இறங்குவதற்காக பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ​​பின்தொடர்ந்து வந்த லொறி ஒன்று, பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றது.
எழுத்து அளவு:

3 வயது ஆண் குழந்தையொன்று, அவ்வழியாகப் பயணித்த பஸ் ஒன்றில் மோதுண்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய், இன்று (30) பிற்பகல் 1.30 மணியளவில், தனது சகோதரியின் மகளுக்கு காது குத்துவதற்காக, மாலமுல்லா பகுதியில் உள்ள ஒரு விகாரைக்குச் சென்றுள்ளார்.

இதற்காக, அந்தத் தாய், அவரது சகோதரி, 3 வயதுச் சிறுவன், அச்சிறுவனின் 10 வயதுச் சகோதரன் மற்றும் காது குத்துவதற்காகக் காத்திருந்த சிறுமி ஆகியோர், முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.

இதன்போது, பாணந்துறையின் ருக்கஹா பகுதியில் பயணிகள் இறங்குவதற்காக பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ​​பின்தொடர்ந்து வந்த லொறி ஒன்று, பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றது.

அந்த நேரத்தில், பஸ்ஸுக்கு எதிர்முனையில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதி பிரேக் போட்டதால், முச்சக்கர வண்டியில் இருந்த மேற்படி 3 வயதுக் குழந்தை தூக்கி வீசப்பட்ட நிலையில், எதிரே வந்துகொண்டிருந்த பஸ்ஸில் மோதியுள்ளது.

பஸ் ஓட்டுநர், அந்த விபத்தை எதிர்பார்க்காத நிலையில், பஸ்ஸை தொடர்ந்து ஓட்டியுள்ளார். விபத்தில் இறந்த குழந்தை பாணந்துறை - அருக்கொட, பொன்சேகா மாவத்தையைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...