Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

'சகல திருடர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள்!'

T

The Leader Desk

மே 30, 2025 • 8:13 AM

'சகல திருடர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்த வகையில் கள்வர்கள் பிடிப்பதில் தாமதம் என்ற மக்களின் அதிருப்தியை நாம் ஏற்கின்றோம், சட்டத்தின் பிரகாரம் அனைத்து கள்வர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
  • நாம் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடிக்கவில்லை.
  • கொழும்பு தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

அந்த வகையில் கள்வர்கள் பிடிப்பதில் தாமதம் என்ற மக்களின் அதிருப்தியை நாம் ஏற்கின்றோம், சட்டத்தின் பிரகாரம் அனைத்து கள்வர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பு தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியினர் பதவி, பட்டங்களுக்காக அரசியல் செய்யும் நபர்கள் கிடையாது. எவரும் பதவிகளைக் கேட்டுப் பெறுவதில்லை. கட்சியால் பதவிகள் கையளிக்கப்படும். அந்த பொறுப்பு சரியாக நிறைவேற்றப்படும்.

அதற்காக அர்ப்பணிப்புடன் தோழர்கள் செயற்படுவார்கள். தேசிய மக்கள் சக்தியினருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை வழங்கியும், கள்வர்களைப் பிடிப்பதில் அவர்கள் வேகம் காட்டவில்லை, கள்வர்களைச் சிறையில் அடைக்கவில்லை என்ற கவலை மக்கள் மத்தியில் உள்ளது.

அதனை நாம் ஏற்கின்றோம். நாம் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. கியூபா மற்றும் வடகொரியாவில் நடந்ததைப் போன்றும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஜனநாயகம், சட்டம் மற்றும் அரசமைப்பின் பிரகாரமே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளது.

எனவே, சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே செயற்பட வேண்டியுள்ளது. அதன் பிரகாரம் நாம் செயற்பட்டு வருகின்றோம். மேர்வின் சில்வா, கெஹலிய ரம்புக்வெல, பிரசன்ன ரணவீர உள்ளிட்டவர்கள் சிறையில் உள்ளனர்.

சட்டம் உரிய வகையில் செயற்பட்டு வருகின்றது. அது உரிய வகையில் செயற்படுத்தப்படும். அனைத்து கள்வர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...