Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஜம்பர் அணிவிக்கப்பட்ட மஹிந்தானந்த, நளின் பாய், தலையணையுடன் பொதுச் சிறைக்கூடத்தில் அடைப்பு!

T

The Leader Desk

மே 30, 2025 • 7:58 AM

ஜம்பர் அணிவிக்கப்பட்ட மஹிந்தானந்த, நளின் பாய், தலையணையுடன் பொதுச் சிறைக்கூடத்தில் அடைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • இதன்படி, அந்தக் காலத்தில் சதொசவின் தலைவராக பணியாற்றிய நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுவதாக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
  • இதுதவிர, பிரதிவாதிகளான நளின் பெர்னாண்டோவுக்கு 4 இலட்சம் ரூபாய் அபராதமும், மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
  • தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் இருவரும் நேற்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எழுத்து அளவு:

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இருவருக்கும் சிறைச்சாலை உடை (ஜம்பர்) அணிவிக்கப்பட்டு, தூங்குவதற்கு பாய் மற்றும் தலையணை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், சதொச நிறுவனம் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 14,000 கேரம் பலகைகள் மற்றும் 11,000 தாம் பலகைகளை சட்டவிரோதமாக விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்து, அரசுக்கு 53.1 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது.

இதன்படி, அந்தக் காலத்தில் சதொசவின் தலைவராக பணியாற்றிய நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுவதாக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

இதுதவிர, பிரதிவாதிகளான நளின் பெர்னாண்டோவுக்கு 4 இலட்சம் ரூபாய் அபராதமும், மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் இருவரும் நேற்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு, முன்னாள் அமைச்சர்கள் இருவரும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறைக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும், நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளுக்கு வழங்கப்படும் "ஜம்பர்" உடை இருவருக்கும் அணிவிக்கப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

இதற்கிடையில், இன்றைய தினம் (30) அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் பணி வழங்கப்படவுள்ளதாகவும், பெரும்பாலும் இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சகப் பிரிவில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...