Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பாதிக்கப்படக்கூடிய நிலையில் இலங்கையின் பொருளாதார நிலைமைகள்: IMF எச்சரிக்கை!

T

The Leader Desk

மார்ச் 30, 2025 • 5:15 AM

பாதிக்கப்படக்கூடிய நிலையில் இலங்கையின் பொருளாதார நிலைமைகள்: IMF எச்சரிக்கை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவானது மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்த உடனேயே, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக நான்காவது தவணைக்கான 334 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • அதனடிப்படையில் இலங்கைக்கான மொத்த நிதி உதவியை 1.34 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது.
  • அதேநேரம் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்கள் பலனளித்து வருவதோடு, பொருளாதார மீள் எழுச்சியானது வேகமடைந்து வருகின்றது.
எழுத்து அளவு:

பாதிக்கப்படக்கூடியதாகவே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதன் ஊடகப்பேச்சாளர் ஜூலி கோசாக், கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவானது மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்த உடனேயே, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக நான்காவது தவணைக்கான 334 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இலங்கைக்கான மொத்த நிதி உதவியை 1.34 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது. அதேநேரம் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்கள் பலனளித்து வருவதோடு, பொருளாதார மீள் எழுச்சியானது வேகமடைந்து வருகின்றது.

அத்துடன் இலங்கையில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது, வருமானத்துக்கான சூழல் மேம்பட்டு வருகிறது, வெளிநாட்டுக் கையிருப்பும் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2024 இல் 5 சதவீதத்தை எட்டியது,

மேலும் இரண்டு வருட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் 5 சதவீதத்தை எட்டியமையும் முக்கியமான விடயமாகும்.

இவ்வாறாக நேர்மறையான நிலைமைகள் காணப்பட்டாலும் நாட்டின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது.

எனவே பாரிய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய சீர்திருத்தச் செயற்பாடுகளை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...