Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

3 மாதங்களாக வெற்றிடமாகவ உள்ள RTI தலைவர் பதவி!

T

The Leader Desk

ஜூலை 7, 2025 • 8:21 AM

3 மாதங்களாக வெற்றிடமாகவ உள்ள RTI தலைவர் பதவி!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான தலைவர் இதுவரை ஜனாதிபதியால் நியமிக்கப்படவில்லை.
  • அந்த ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் உபாலி அபேரத்ன, கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி அப்பதவியிலிருந்து விலகினார்.
  • உபாலி அபேரத்னவின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான வேட்புமனுக்களை அரசியலமைப்பு சபை கோரியுள்ளது, அதற்கான கடைசி தேதி ஏப்ரல் 1 ஆகும்.
எழுத்து அளவு:

மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான தலைவர் இதுவரை ஜனாதிபதியால் நியமிக்கப்படவில்லை.

அந்த ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் உபாலி அபேரத்ன, கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி அப்பதவியிலிருந்து விலகினார்.
அதற்கு முன்னர் அதில் அங்கம் வகித்த மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ரோஹினி வல்கம இராஜினாமா செய்ததுடன் ஊடக அமைப்புக்களினால் பரிந்துரைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டி.என்.சமரகோனின் பெயர் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தின் பின்னர் ஜனாதிபதியினால் மே மாதம் உறுதியாக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி அவரை அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கவில்லை.
உபாலி அபேரத்னவின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான வேட்புமனுக்களை அரசியலமைப்பு சபை கோரியுள்ளது, அதற்கான கடைசி தேதி ஏப்ரல் 1 ஆகும்.

அரசியலமைப்பு சபையின் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, பொருத்தமான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளாரா என்று விசாரித்த போது, ​​
அவர் அந்தக் கேள்வியை முழுமையாக செவிசாய்க்காமல், ஊடக செயலாளரிடம் கேட்குமாறு சொன்னார்.
எவ்வாறாயினும், இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு சட்டத்தரணி நிமல் போபகே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நிமல் போபகே மீது ஜனாதிபதியின் நட்புறவு கொண்ட பிரபல சமூகவலைத்தள ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...