Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘3 வருடங்களில் வட, கிழக்கு மீள்குடியேற்றம் நிறைவடையும்’

T

The Leader Desk

நவம்பர் 29, 2023 • 8:01 AM

‘3 வருடங்களில் வட, கிழக்கு மீள்குடியேற்றம் நிறைவடையும்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
  • நாடாளுமன்றில் இன்று (29) உரையாற்றிய அவர், “2027ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்ற விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.
  • “இதற்காக 1 இலட்சத்து 47 ஆயிரத்து 848 வீடுகளை, அரசாங்கம் பல்வேறு தரப்பினரின் உதவியுடனும் நிர்மானிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
  • இந்த வருட ஆரம்பத்தில் 1700 வீட்டுத் தொகுதிகளில் நிர்மானப் பணிகள் பூரணமாகியிருக்கவில்லை.
எழுத்து அளவு:

நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (29) உரையாற்றிய அவர், “2027ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்ற விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.

“யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்ய பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

“அப்பகுதி மக்கள் எந்தவகையிலும் பாதிக்காத வகையில் இந்த செயற்பாடுகளை நாம் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தோம். தற்போதும், யுத்தம் காரணமாக அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களை சொந்த பகுதிகளில் குடியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

“இதற்காக 1 இலட்சத்து 47 ஆயிரத்து 848 வீடுகளை, அரசாங்கம் பல்வேறு தரப்பினரின் உதவியுடனும் நிர்மானிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் 1700 வீட்டுத் தொகுதிகளில் நிர்மானப் பணிகள் பூரணமாகியிருக்கவில்லை.

“இவ்வருட ஆரம்பத்தில் நாம் மேலும் 1665 வீடுகளை நிர்மாணிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம். 150 மில்லியன் ரூபாய் நிதி இதற்காக ஒதுக்கப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 500 மில்லியன் ரூபாயும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது.

“3 வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரையும் குடியமர்த்த முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம். 2024ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டுக்குள், கண்ணிவெடிகள் அற்ற நாடாக இதனை மாற்ற நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

“வடக்கு, கிழக்கில் 204 சதுர கிலோமீற்றர் அளவில் கண்ணி வெடிகளை அகற்றி, அந்தக் காணிகளை மக்களிடத்தில் ஒப்படைத்துள்ளோம். இன்னும் 15 சதுர கிலோமீற்றர் காணிகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியுள்ளது. இதற்காக சர்வதேசத்தின் நிதியுதவிகள் எமக்கு கிடைத்துள்ளன” என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...