Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஓமானிடமிருந்து 3.6 பில்லியன் கடன் ஒப்பந்தம்! உதய கம்மன்பில

T

The Leader Desk

அக்டோபர் 21, 2021 • 4:17 PM

ஓமானிடமிருந்து 3.6 பில்லியன் கடன் ஒப்பந்தம்! உதய கம்மன்பில 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தக் கடனை திருப்பிச் செலுத்த 20 வருடங்களாகும்.
  • ஓமான் அரசு இணங்கியுள்ள கடன் தொகை கிடைக்காத பட்சத்தில் எரிபொருளுக்கான விலையை கட்டாயமாக அதிகரிக்க நேரிடுமென எரிபொருள் அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார்.
  • தற்போது ஒரு லீற்றர் பெற்றோலில் ரூ,18ம், ஒரு லீற்றர் டீசலில் ரூ.30ம் நட்டமடைவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமைச்சருக்கு நேற்று அறிவித்துள்ளார்.
  • ஓமான் அரசிடமிருநது; கிடைக்கவிருக்கும் 3.6 பில்லியன் கடன் தொகையானது ஒரு வருடத்திற்கு எரிபொருள் வாங்க போதுமானதாகும்.
எழுத்து அளவு:

இந்தக் கடனை திருப்பிச் செலுத்த 20 வருடங்களாகும். கடனை திருப்பிச் செலுத்துவதற்காக 5 வருட சலுகைக் காலத்தையும் வழங்க ஓமான் அரசு இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எரிபொருள் கொள்முதல் செய்வதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதிய பணம் இல்லாமையால் நெருக்கடியில் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. தவிரவும், இதற்கு முன்பு விலைக்கு வாங்கிய எரிபொருளுக்காக அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ள கடணை பெற்றுக்கொள்வதிலும் கூட்டுத்தாபனம் நெருக்கடியை சந்தித்துள்ளது.

ஓமான் அரசு இணங்கியுள்ள கடன் தொகை கிடைக்காத பட்சத்தில் எரிபொருளுக்கான விலையை கட்டாயமாக அதிகரிக்க நேரிடுமென எரிபொருள் அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கிடையே எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல்வேறு சமயங்களில் அமைச்சரைக் கோரியிருந்தது. தற்போது ஒரு லீற்றர் பெற்றோலில் ரூ,18ம், ஒரு லீற்றர் டீசலில் ரூ.30ம் நட்டமடைவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமைச்சருக்கு நேற்று அறிவித்துள்ளார்.

ஓமான் அரசிடமிருநது; கிடைக்கவிருக்கும் 3.6 பில்லியன் கடன் தொகையானது ஒரு வருடத்திற்கு எரிபொருள் வாங்க போதுமானதாகும். இதற்கிடையே, இந்தியாவிடமிருந்தும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஓமானிடமிருந்து 3.6 பில்லியன் கடன் ஒப்பந்தம்! உதய கம்மன்பில | Tamil Leader | We Lead the Nation