Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்; மரணத்துக்கான காரணம் கண்டறிவு!

T

The Leader Desk

மே 29, 2025 • 2:07 PM

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்; மரணத்துக்கான காரணம் கண்டறிவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
  • முக்கியமாக இந்த அறிக்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 52இன் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • இவ் வழக்கானது அடுத்த தவணைக்காக ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் இன்றையதினம் (29.05.2025) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன், காணாமல் போனோர் அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது சட்டவைத்திய அதிகாரி குழுவினரால் தயாரிக்கப்பட்ட முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக இந்த அறிக்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 52இன் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கே நீதிமன்ற நடவடிக்கையின்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இறந்தவர்கள் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை மேலும் அடையாளம் காணும் முகமாக நீதவானால் காணாமலாக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிகள், காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு அவர்களை கண்டறிய உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணங்களாக குண்டுவெடிப்பு, சூட்டுக்காயங்கள் இருந்தது. சில எலும்புக்கூடுகளில் சில பகுதிகளே இருந்தமையால் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இவ் வழக்கானது அடுத்த தவணைக்காக ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் கருத்து தெரிவிக்கையில், “கொக்குதொடுவாய் மனித புதகுழி வழக்கு இன்றையதினம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏற்கனவே சட்ட வைத்திய அதிகாரிகளினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட இருந்தது” என்றார்.

“இன்று சட்ட வைத்திய அதிகாரியின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இறந்த மண்டை ஓட்டு தொகுதிகளில் எத்தனை ஆண்கள்? எத்தனை பெண்கள்? இறப்புக்கான காரணங்கள் போன்ற விவரங்களும் சம்பவத்திற்கான விடய தானங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

“இந்த இறுதி அறிக்கைகளை அடுத்து காணவனமால் போனோர் அலுவலகத்தின் இந்த இறுதி அறிக்கைகள் காணப்படுகின்ற இலக்கங்கள், அதாவது தமிழீழ விடுதலை புலிகளுடைய இலக்கமான கருதப்படும் இலக்கங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க இருக்கிறார்கள்.

“அந்த பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான, தொடர்புடைய மக்கள் நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற பதிவாளரிடம் இது சம்பந்தமாக தெரிவிக்கும் போது மேற்கொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட இருக்கின்றது. ஆகவே இந்த இறுதி அறிக்கையை வைத்துக்கொண்டு காணாமல் போனோர் அலுவலகம் பத்திரிகை பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான முடிவுகளை எடுக்க இருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...