Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நடிகர் ராஜேஷ் காலமானார்!

T

The Leader Desk

மே 29, 2025 • 7:32 AM

நடிகர் ராஜேஷ் காலமானார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாறுபட்ட, அழுத்தமான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் இவர்.
  • தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரான ராஜேஷ் சென்னையில் இன்று (மே 29) காலமானார்.
  • உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலை 8.15 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • ராஜேஷின் மனைவில் கடந்த 2012ஆம் ஆண்டிலேயே காலமாகிவிட்டார்.
எழுத்து அளவு:

மாறுபட்ட, அழுத்தமான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் இவர்.

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரான ராஜேஷ் சென்னையில் இன்று (மே 29) காலமானார். அவருக்கு வயது 75. உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலை 8.15 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராஜேஷிற்கு இன்று காலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜேஷின் மனைவில் கடந்த 2012ஆம் ஆண்டிலேயே காலமாகிவிட்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ், தொடர்ந்து கவனத்தை ஈர்க்கத்தக்க, அழுத்தமான பாத்திரங்களில் திரையில் தோன்றினார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த அவர், டப்பிங் குரல் கலைஞராகவும் திகழ்ந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள நடிகர் ராஜேஷ், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம்தான் அவரது முதல் படம் என்றாலும், கே. பாக்கியராஜ் திரைக்கதையில் பாலகுரு இயக்கிய 'கன்னிப் பருவத்திலே' படத்தில்தான் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார்.

'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய வேடத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும், அந்தப் பாத்திரம் இவருக்கு ஒரு மறக்க முடியாத பாத்திரமாக அமைந்தது.

2024ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி - காத்ரீனா கைஃப் நடித்து வெளிவந்த 'மெர்ரி கிறிஸ்மஸ்' திரைப்படம்தான் இவர் நடித்து வெளியான கடைசித் திரைப்படமாகும்.

1949ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வில்லியம்ஸ் - லில்லி கிரேஸ் தம்பதியின் மகனாகப் பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தாலும் பட்டப்படிப்பை நிறைவுசெய்யவில்லை.

சில காலம் சென்னையில் ஆசிரியராகப் பணிபுரிந்த அவருக்கு 1974ல் 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குப் பிறகு நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு 'கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குப் பிறகு தொடர்ச்சியாக அவர் திரைப்படங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக யூ டியூபில் தனது அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துவந்தார்.

- பிபிசி

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நடிகர் ராஜேஷ் காலமானார்! | Tamil Leader | We Lead the Nation