Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இவ்வாண்டில் இன்று 50ஆவது துப்பாக்கிச்சூடு!

T

The Leader Desk

மே 29, 2025 • 7:08 AM

இவ்வாண்டில் இன்று 50ஆவது துப்பாக்கிச்சூடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இன்று (29) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் குறித்த நபரின் முதுகில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
  • காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் T-56 துப்பாக்கியால் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்துவதை CCTV காட்சிகள் காட்டுகின்றன.
எழுத்து அளவு:

சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாணந்துறை - வேகட பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நடந்துள்ளது.இதன்போது, காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பாணந்துறை, வேகட பகுதியில் முச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிலையமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

இன்று (29) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் குறித்த நபரின் முதுகில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் T-56 துப்பாக்கியால் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்துவதை CCTV காட்சிகள் காட்டுகின்றன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வௌிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நிலங்கவின் நெருங்கிய உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சமீப நாட்களாக, நிலங்க மற்றும் பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மாலமுல்ல மற்றும் மாதுபிட்டிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இவ்வாண்டில் இன்று 50ஆவது துப்பாக்கிச்சூடு! | Tamil Leader | We Lead the Nation