Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஜனாதிபதியின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கு தென்னிலங்கை அதிகாரிகள் முட்டுக்கட்டை!

T

The Leader Desk

மே 29, 2025 • 2:22 AM

ஜனாதிபதியின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கு தென்னிலங்கை அதிகாரிகள் முட்டுக்கட்டை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டைபோடும் விதத்தில் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (28) சந்தித்துக் கலந்துரையாடினர்.
  • இதில் ஆளுநர் உரையாற்றும்போது, கடந்த 3 தசாப்தங்களாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் போரால் பாதிக்கப்பட்டிருந்தன.
  • இந்த நிலையிலேயே ஜனாதிபதி உலக வங்கியை வடக்கு – கிழக்கின் துரித அபிவிருத்தியில் கவனம் செலுத்துமாறு கோரியிருந்தார்.
எழுத்து அளவு:

உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டைபோடும் விதத்தில் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (28) சந்தித்துக் கலந்துரையாடினர். இதில் ஆளுநர் உரையாற்றும்போது, கடந்த 3 தசாப்தங்களாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் போரால் பாதிக்கப்பட்டிருந்தன. இந்தக் காலப் பகுதியில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு எந்தவொரு உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் இங்கிருந்த உட்கட்டுமானங்களும் முழுமையாக அழிவடைந்திருந்தன.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி  உலக வங்கியை வடக்கு – கிழக்கின் துரித அபிவிருத்தியில் கவனம் செலுத்துமாறு கோரியிருந்தார்.

அதற்கு அமைவாக உலக வங்கிக் குழுவினர் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களையும் பார்வையிட்டிருக்கின்றனர்.

அதற்கு அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். போரால் மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கை ஒருபோதும் வந்து பார்வையிடாத அதிகாரிகள் சிலர் கொழும்பிலிருந்து கொண்டு உலக வங்கியின் திட்டங்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு ஏன் வழங்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது.

அவர்களும் இங்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்டால் எமது கோரிக்கைகளின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்வார்கள்” என கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...