Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கனேடிய பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள இலங்கைத் தமிழர்கள்!

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2025 • 3:15 PM

கனேடிய பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள இலங்கைத் தமிழர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏக காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
  • நேற்று (28) இடம்பெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ்க் கனேடியர்கள் போட்டியிட்டனர்.
  • இதேபோல கென்சவேட்டிவ் கட்சியில் இருந்து லயனல் லோகநாதன், நிரான் ஜெயநேசன் ஆகிய இலங்கைப் பூர்வீக தமிழ் கனேடியர்ளும் பசுமை கட்சியில் இருந்து இன்னொரு ஈழத் தமிழரும் போட்டியிட்டிருந்தார்.
  • இவருக்கு 34,941 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் மொத்த வாக்குகளில் 63.89 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
எழுத்து அளவு:

ஏக காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

நேற்று (28) இடம்பெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ்க் கனேடியர்கள் போட்டியிட்டனர்.

இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகியோர், ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இந்த தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி அறுதிப் பெரும்பான்மைக்கு குறைவான பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் இருந்து இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்க் கனேடியரும் கனேடிய நீதி அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி தனது ஸ்கார்பாரோ - கில்ட்வுட் - ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அதேபோல ஆளும் கட்சியில் இருந்து யுவனிதா நாதனும் பிக்கரிங் - புரூக்ளின் தொகுதியிலும் களம் இறங்கியிருந்தார்.

இதேபோல கென்சவேட்டிவ் கட்சியில் இருந்து லயனல் லோகநாதன், நிரான் ஜெயநேசன் ஆகிய இலங்கைப் பூர்வீக தமிழ் கனேடியர்ளும் பசுமை கட்சியில் இருந்து இன்னொரு ஈழத் தமிழரும் போட்டியிட்டிருந்தார்.

இவர்களில் ஹரி ஆனந்தசங்கரி தனது தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு 34,941 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் மொத்த வாக்குகளில் 63.89 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதேபோல, மார்க்கம் பகுதியில் நீண்டகாலமாக வசிப்பவரும் சில வருடங்களுக்கு முன்னரே பொதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் கனடிய பெண்மணி என்ற பதிவை பெற்றவருமான யுவனிதா நாதன், 14,000க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று மொத்த வாக்குளில் 52 வீதம் பெற்றுள்ளார்.

ப்ரோக் பல்கலைக்கழக பட்டதாரியான யுவனிதா நாதன் ஏற்கவே உள்ளுராட்சி உறுப்பினராக இருந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

புதிய அரசாங்கத்திலும் தற்போது நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு அந்த பொறுப்பு வழங்ககடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய அமைச்சரவையில் சிலவேளைகளில் யுவனிதா நாதனுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியில் போட்டியிட்ட லயனல் லோகநாதன் மற்றும் நிரான் ஜெயநேசன் ஆகியோர் தமக்குரிய வெற்றிவாய்ப்புக்களை தவறிவிட்டாலும் அவர்களும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...