Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நாட்டில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் பற்றி கேள்வி எழுப்ப ஊடகவியலாளர்களுக்கு நிபந்தனை!

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2025 • 3:03 PM

நாட்டில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் பற்றி கேள்வி எழுப்ப ஊடகவியலாளர்களுக்கு நிபந்தனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த அமைச்சர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்தும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
  • அதன் பிரகாரம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் மாத்திரமே இனி வரும் காலங்களில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியும்.
  • அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த அமைச்சர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்தும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வூடகச் சந்திப்பின் போது, நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்ட போது, அவ்வாறு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களுக்கு அமைச்சர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அதாவது, எதிர்காலத்தில் ஊடகச் சான்றுகளைக் கொண்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

அதன் பிரகாரம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் மாத்திரமே இனி வரும் காலங்களில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியும்.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்குறித்த தீர்மானங்களை அறிவித்துள்ளார்.

அத்துடன் அமைச்சரவைத் தீர்மானங்கள் மற்றும் அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பான கேள்விகள், அரசாங்கம் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் தான் பதிலளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பை மேற்கொள்வதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...