Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சர்வதேச ரீதியில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள்!

T

The Leader Desk

மார்ச் 29, 2025 • 2:04 PM

சர்வதேச ரீதியில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.
  • “அதே போல யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாகக் கூறும் விடயங்களை விற்பனை செய்து அதில் வாழும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் சர்வதேசத்தில் இருக்கின்றனர்.
  • தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

“எமது நாட்டின் இராஜதந்திர செயல்முறையும், வெளிவிவகார அமைச்சின் பணிகளும் பலவீனமடைந்துள்ளன. முன்னாள் இராணுவ தலைமை அதிகாரிகள் உட்பட நால்வருக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமையின் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினரின் ஆதரவான சக்திகள் இதன் பின்னணியில் உள்ளன.

“அல்ஜஸீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியினூடாக ரணில் விக்ரமசிங்க மீது ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளனர். இதனை மீண்டும் எழுச்சிப் பெறச் செய்ய அவர்கள் செயற்படுகின்றார்கள். ஏனெனில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

“அதே போல யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாகக் கூறும் விடயங்களை விற்பனை செய்து அதில் வாழும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் சர்வதேசத்தில் இருக்கின்றனர். சிலர் ஈழத்தை அமைக்கும் நோக்கில் செயற்படுகின்றனர்.

“மேலும் சிலர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை விற்றுச் சாப்பிடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டிய குழுவினரே. விசேடமாக ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளில் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

“தற்போதைய அரசாங்கத்தின் அலட்சியமும், இராஜதந்திர விவகாரங்களில் திறமையின்மையும் இராணுவத்தினருக்கு எதிரான கடுமையான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இது இன்னும் தீவிரமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...