Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் மோடியைச் சந்திக்க அனுமதி!

T

The Leader Desk

மார்ச் 29, 2025 • 1:36 PM

தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் மோடியைச் சந்திக்க அனுமதி!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பேர் சந்தித்துக் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 4ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து 6 ஆம் திகதி காலை இந்தியா திரும்புகின்றார்.
  • இதற்கமைய தமிழர் தரப்பில் 7 பிரதிநிதிகள், மோடியைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 4 பேரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) சார்பில் ஒருவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் இருவருமாக இந்த 7 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

7 பேர் சந்தித்துக் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 4ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து 6 ஆம் திகதி காலை இந்தியா திரும்புகின்றார். இதன்போது அவரைச் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் கோரி பல தமிழ்த் தரப்புக்களும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தை நாடியுள்ளனர்.

இதற்கமைய தமிழர் தரப்பில் 7 பிரதிநிதிகள், மோடியைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 4 பேரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) சார்பில் ஒருவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் இருவருமாக இந்த 7 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், அகில இலங்கை தமிழக காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதனுடன் பங்காளிக் கட்சித் தலைவர்களில் ஒருவருமாக இந்த 7 பேரும் மோடியைச் சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு கொழும்பில் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...