Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மியன்மார் நிலநடுக்கத்தில் பலியானோர் தொகை 1,002: 2,376 பேர் காயம்: 30 பேரை காணவில்லை!

T

The Leader Desk

மார்ச் 29, 2025 • 10:23 AM

மியன்மார் நிலநடுக்கத்தில் பலியானோர் தொகை 1,002: 2,376 பேர் காயம்: 30 பேரை காணவில்லை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதோடு, 2,376 பேர் காயமடைந்துள்ள வேளையில், 30 பேரைக் காணவில்லை.
  • ரிக்டர் அளவைக் கருவியில் 7.7ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு, உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.
  • மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அந்நாட்டின் ஆளும் ராணுவம் எச்சரித்துள்ளது.
எழுத்து அளவு:

அதோடு, 2,376 பேர் காயமடைந்துள்ள வேளையில், 30 பேரைக் காணவில்லை. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அந்நாட்டின் ஆளும் ராணுவம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இப்பேரிடரில் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டு மக்களுக்கு உதவி மற்றும் நன்கொடைகளை வழங்குமாறு இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்துலக உதவிக்கான வழிகள் திறந்துவிட்டபட்டதோடு, உதவிக்கரம் நீட்ட முன்வந்த ஆசியானின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் சலுகைகளையும் தாங்கள் ஏற்றுக்கொண்டதாக மின் அவுங் லாயிங்  கூறினார்.

ரிக்டர் அளவைக் கருவியில் 7.7ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு, உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.

அதுமட்டுமின்றி, நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன. அங்கு குடியிருப்பாளர்கள் பதற்றமடைந்ததோடு பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டெலெயிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் பல பகுதிகளில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...