Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மியான்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்: பலியானோர் 180ஆக அதிகரிப்பு: ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம!

T

The Leader Desk

மார்ச் 29, 2025 • 2:18 AM

மியான்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்: பலியானோர் 180ஆக அதிகரிப்பு: ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
  • இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடான மியான்மரை வெள்ளிக்கிழமை பகல் 12.50 மணிக்கு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலுக்கின.
  • மற்றும் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
  • மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மன்டலேயில் ரிக்டரில் 7.7 அளவு பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்தன.
எழுத்து அளவு:

180ஐ தாண்டியது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான நிலநடுக்கத்தை மியான்மர் நாடு சந்தித்துள்ளது. சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற தாய்லாந்தையும் நிலநடுக்கம் உலுக்கி எடுத்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடான மியான்மரை வெள்ளிக்கிழமை பகல் 12.50 மணிக்கு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உலுக்கின. 7.7 மற்றும் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மன்டலேயில் ரிக்டரில் 7.7 அளவு பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்தன.

144 பேர் இறந்துவிட்டதாகவும் 730 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் மியான்மர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை பல ஆயிரங்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.காயம் அடைந்தவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுவதாக மியானமரின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் நெடுஞ்சாலைகள் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன.உணவுக்கும் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...