Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஆஸ்கார் குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு!

T

The Leader Desk

ஜூன் 28, 2025 • 4:23 AM

ஆஸ்கார் குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்திய அளவில் இதற்கு முன்னர் யாருக்கு எல்லாம் இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது; புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விதியில் இருக்கும் சிக்கல் என்ன?
  • இன்று ஆஸ்கார் விருது குழு, அகாடமியில் இணைந்துகொள்ள 534 படைப்பாளிகளுக்கு இன்வைட் ஒன்றை அனுப்பியிருக்கிறது.
  • இந்த ஆண்டு மட்டும் புதிதாக 534 நபர்களுக்கு ஆஸ்கார் குழுவில் இடம்பெறுவதற்கான உறுப்பினர் படிவம் அனுப்பப்பட்டிருக்கிறது.
  • RRR படம் வெளியான போது ராம் சரண், ஜூனியர் NTR, ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, நாட்டு நாட்டு பாடலின் பாடலாசிரியர் சந்திரபோஸ், ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடப்பட்டது.
எழுத்து அளவு:

இந்திய அளவில் இதற்கு முன்னர் யாருக்கு எல்லாம் இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது; புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விதியில் இருக்கும் சிக்கல் என்ன? இவை குறித்தெல்லாம் விரிவாகப் பார்க்கலாம்..

இன்று ஆஸ்கார் விருது குழு, அகாடமியில் இணைந்துகொள்ள 534 படைப்பாளிகளுக்கு இன்வைட் ஒன்றை அனுப்பியிருக்கிறது. இந்திய அளவில் கமல் ஹாசன், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மன் குர்ரானா, ஒளிப்பதிவாளர் ரனபீர் தாஸ், ஒப்பனைக் கலைஞர் மேக்ஸிமா பாஸு, இயக்குநர் பாயல் கபாடியா என எட்டு படைப்பாளிகளுக்கு ஆஸ்கார் தேர்வுக்குழுவில் இணைய டிக்கெட் அனுப்பியிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் புதிதாக 534 நபர்களுக்கு ஆஸ்கார் குழுவில் இடம்பெறுவதற்கான உறுப்பினர் படிவம் அனுப்பப்பட்டிருக்கிறது.

அகாடாமியின் ஜூரி குழுவில் இணைய ஏற்கெனவே ஆஸ்கார் அகாமியில் மெம்பராக இருக்கும் இருவர் முன்மொழிய வேண்டும். இந்திய அளவில் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா, அமிர் கான், சல்மான் கான், தீபிகா படுகோனே, அனுபம் கேர், மணி ரத்னம், சூர்யா உள்ளிட்ட பலருக்கு இதற்கு முன்னர் ஆஸ்கார் அகாடாமியின் தேர்வுக்குழுவில் இணைய அழைப்பு விடப்பட்டிருக்கிறது. RRR படம் வெளியான போது ராம் சரண், ஜூனியர் NTR, ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, நாட்டு நாட்டு பாடலின் பாடலாசிரியர் சந்திரபோஸ், ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடப்பட்டது. 2017ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500 பேரை புதிதாக ஆஸ்கார் குழு இணைத்துக்கொண்டிருக்கிறது.

2025ம் ஆண்டு முதல் புதிதாக ஆஸ்கார் தேர்வுக்குழுவில் ஒரு விதியைச் சேர்த்திருக்கிறார்கள். அதன்படி இனி ஒரு பிரிவில் இருக்கும் எல்லா படைப்புகளையும் பார்த்தவர்கள் மட்டுமே, அந்த பிரிவில் தேர்வாகும் படத்துக்கு வாக்களிக்க முடியும். இதற்கு முன்னர் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை.

கமல்ஹாசன் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அடுத்த ஆண்டு விருதுக்கு சமர்ப்பிக்கப்படும் படங்களை கமல் பார்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அந்தப் படைப்புகளில் பிடித்தவற்றை கமல் தேர்வு செய்யலாம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...