Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்கப்படுமா?

T

The Leader Desk

மார்ச் 28, 2025 • 1:56 PM

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்கப்படுமா?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
  • சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம் குறித்த வழக்குகள் மீதான விசாரணையைஎதிர்வரும் முதலாம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது.
  • இதன்படி, சட்டமா அதிபர் திணைக்களத்தில் நாளைமறுதினம் முற்பகல் 10 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்று மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஜனநாயகத் தமிழ்க் தேசியக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் கட்சி, ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெவ்வேறு மாவட்டங்களில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராசா, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டன. இந்த வழக்குகளில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்னிலையாகியிருந்தார்.

மேற்படி வழக்குகளின் விசாரணையின் போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, இது சம்பந்தமாக சுமுகமான முடிவுக்கு வர விரும்புவதாக மன்றுரைத்தார்.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம் குறித்த வழக்குகள் மீதான விசாரணையைஎதிர்வரும் முதலாம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது.

எனினும், அன்றைய தினத்துக்கு முன்னர், சட்டமா அதிபர் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் ஆகிய தரப்பினர்களுக்கு இடையே கலந்துரையாடல் நடத்தப்பட்டு அதன்போது எட்டப்படும் தீர்மானம் தொடர்பில் மன்றுக்கு அறியப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சட்டமா அதிபர் திணைக்களத்தில் நாளைமறுதினம் முற்பகல் 10 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்று மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பில் சட்டமா அதிபரால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...