Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தேங்காய் அறுவடை மீண்டும் குறையும்: விலை மேலும் அதிகரிக்கும்!

T

The Leader Desk

மே 27, 2025 • 1:38 PM

தேங்காய் அறுவடை மீண்டும் குறையும்: விலை மேலும் அதிகரிக்கும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேங்காய் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று தெங்கு அபிவிருத்திச் சபை கூறுகிறது.
  • மே மற்றும் ஜூன் மாதங்களில் 555 மில்லியன் தேங்காய் அறுவடை மதிப்பிடப்பட்டு, உற்பத்தியில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு இருந்தபோதிலும், விலைகள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிப்பதாக, அவர் சுட்டிக்காட்டினார்.
  • அதற்கு ஒரு தீர்வாக, தேங்காய் இருப்பில் ஒரு பகுதியை மட்டுமே ஏலம் மூலம் விற்க வேண்டும் என்றும், மீதமுள்ளவை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
  • அரசாங்கத்திடம் தற்போது கிட்டத்தட்ட 100,000 ஏக்கர் தென்னை நிலங்கள் இருந்தாலும், இந்த நிலத்தின் பெரும்பகுதி பயன்படுத்தப்படாதது குறித்து, இக்கலந்துரையாடலின் போது தெரியவந்தது.
எழுத்து அளவு:

தேங்காய் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று தெங்கு அபிவிருத்திச் சபை கூறுகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பில், தெங்கு அபிவிருத்திச் சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி, அரசு அதிகாரிகளுடன் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடலின் போது வெளிப்படுத்தினார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்து தேங்காய்கள் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டாலும், இடைத்தரகர்கள் அந்தப் பங்குகளை வாங்கி சந்தையில் மிக அதிக விலைக்கு விற்று, பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள் என்றும், இது தேங்காய் விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு நியாயமற்றது மற்றும் பாதகமானது என்றும் ஜயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேங்காய் அறுவடை குறைந்திருந்தா  நெருக்கடியான சூழ்நிலையில், தேங்காய் விலை ரூ. 200 ஐ விட அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் 555 மில்லியன் தேங்காய் அறுவடை மதிப்பிடப்பட்டு, உற்பத்தியில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு இருந்தபோதிலும், விலைகள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிப்பதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கு ஒரு தீர்வாக, தேங்காய் இருப்பில் ஒரு பகுதியை மட்டுமே ஏலம் மூலம் விற்க வேண்டும் என்றும், மீதமுள்ளவை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தேங்காய் விலை பிரச்சினை தொடர்பில் நீண்ட நேரம் செவிமடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேங்காய் விலைகளை நிலைப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு விவசாயத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க, அடுத்த மாதம் முதல் பல திட்டங்களை செயல்படுத்த தெங்கு அபிவிருத்திச் சபை தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசாங்கத்திடம் தற்போது கிட்டத்தட்ட 100,000 ஏக்கர் தென்னை நிலங்கள் இருந்தாலும், இந்த நிலத்தின் பெரும்பகுதி பயன்படுத்தப்படாதது குறித்து, இக்கலந்துரையாடலின் போது தெரியவந்தது. மேலும், அந்த நிலங்களை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் மாதங்களில், தேங்காய் அறுவடை மீண்டும் குறையக்கூடும் என்றும் இது மேலும் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் தலைவர் எச்சரித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தேங்காய் அறுவடை மீண்டும் குறையும்: விலை மேலும் அதிகரிக்கும்! | Tamil Leader | We Lead the Nation