Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தமிழரசுக் கட்சியுடன் கை கோர்த்தது முஸ்லிம் காங்கிரஸ்!

T

The Leader Desk

மே 27, 2025 • 10:49 AM

தமிழரசுக் கட்சியுடன் கை கோர்த்தது முஸ்லிம் காங்கிரஸ்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
  • அதே போன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை உள்ள இடத்தில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கும்.
  • இது குறித்து சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “திருகோணமலை மாநகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸுடன் புரிந்துணர்வு அடிப்படையில் ஆட்சியமைப்போம்.
எழுத்து அளவு:

இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

திருகோணமலை நகரில் வைத்து இன்று (27) கைச்சாத்திடப்பட்ட குறித்த உடன்படிக்கையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசனும் கையொப்பமிட்டனர்.

இது குறித்து சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

“திருகோணமலை மாநகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸுடன் புரிந்துணர்வு அடிப்படையில் ஆட்சியமைப்போம்.

உடன்படிக்கையின் அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் அவர்களது பெரும்பான்மை எங்கு இருக்குமோ அங்கு ஆட்சியமைப்பர்.

அதே போன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை உள்ள இடத்தில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கும். நிதி ஒதுக்கீடு, நிர்வாகம் மற்றும் அதிகார பரவலாக்கம் உள்ளிட்ட மேலும் பல நிபந்தனைகளோடு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்.

குச்சவெளி பிரதேச சபையில் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகள் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...