Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இலங்கையில் பயன்பாட்டுக்கு வருகிறது இந்திய ரூபாய்!

T

The Leader Desk

மே 27, 2025 • 6:06 AM

இலங்கையில் பயன்பாட்டுக்கு வருகிறது இந்திய ரூபாய்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி, இலங்கை மற்றும் பிற நாடுகளில் கடன் கோருவோருக்கு, குறித்த நாடுகளின் உள்ளூர் வங்கிகள் மற்றும் இந்திய வங்கிகளின் கிளைகளின் ஊடாக இந்திய நாணயத்தில் கடன் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த வங்கி மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
  • எனினும் இந்திய நிதியமைச்சு இன்னும் இதற்கான ஒப்புதலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
  • இந்த நிலையில், இந்திய வர்த்தக அமைச்சக தரவுகளின்படி, தெற்காசியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 90 வீதமானவை, 2024-25 ஆம் ஆண்டில் இந்த நான்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • இதன் பெறுமதி கிட்டத்தட்ட 25 பில்லியன் டொலர்களாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இதன்படி, இலங்கை மற்றும் பிற நாடுகளில் கடன் கோருவோருக்கு, குறித்த நாடுகளின் உள்ளூர் வங்கிகள் மற்றும் இந்திய வங்கிகளின் கிளைகளின் ஊடாக இந்திய நாணயத்தில் கடன் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த வங்கி மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இதன் காரணமாக, இந்திய ரூபாயின் பயன்பாடு மற்றும் ஏற்றுக்கொள்ளலை, சர்வதேச வர்த்தகத்தில் மேம்படுத்த முடியும் என்று, ரிசர்வ் வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் இந்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், அண்டை நாடுகளான பங்களாதேஸ், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில்,வெளிநாட்டினருக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம் என்று இந்திய மத்திய வங்கி யோசனை தெரிவித்துள்ளது.

எனினும் இந்திய நிதியமைச்சு இன்னும் இதற்கான ஒப்புதலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய வர்த்தக அமைச்சக தரவுகளின்படி, தெற்காசியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 90 வீதமானவை, 2024-25 ஆம் ஆண்டில் இந்த நான்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி கிட்டத்தட்ட 25 பில்லியன் டொலர்களாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகள், வெளிநாட்டு நாணயங்களில் கடன்களை வழங்குவதற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையில் பயன்பாட்டுக்கு வருகிறது இந்திய ரூபாய்! | Tamil Leader | We Lead the Nation