Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மத்திய மலைநாட்டில் மழையால் பேரழிவு: பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

T

The Leader Desk

மே 27, 2025 • 5:44 AM

மத்திய மலைநாட்டில் மழையால் பேரழிவு: பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
  • இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமலில் இருக்கும் என்று, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இதேவேளை, இன்று (27) காலை ஹட்டன் செனன் பகுதியின் பிரதான வீிதியில் பல மரங்கள் முறிந்து விழுந்ததால், ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • இதனால், வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால், மத்திய மலைநாட்டின் பல மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, கங்க இஹலகோரல பிரதேசங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமலில் இருக்கும் என்று, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (27) காலை ஹட்டன் செனன் பகுதியின் பிரதான வீிதியில் பல மரங்கள் முறிந்து விழுந்ததால், ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிரதான வீதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளூர்வாசிகளும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இதனால், வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் உள்ள டிக்கோயா பகுதியில், பல பெரிய மரங்கள் பிரதான வீதியில் விழுந்துள்ளன. இதனால் வீதியோரத்தில் அமைந்துள்ள பல மின்சார மற்றும் தொலைபேசி கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

ஹட்டன் வனராஜா தோட்டத்தில் உள்ள ஒரு மாமரம் வரிசையாக உள்ள எஸ்டேட் வீடுகளின் மீது விழுந்ததில், மூன்று எஸ்டேட் வீடுகளின் கூரைகள் மற்றும் சமையலறை சுவர்கள் சேதமடைந்துள்ளன.

தற்போது வீசும் பலத்த காற்று காரணமாக, மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் விழுந்துள்ளன. இதன் விளைவாக ஹட்டன், நோர்வூட், கொட்டகலை மற்றும் நோர்ட்டன் ஆகிய பகுதிகளில் முழுமையான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஹட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மத்திய மலைநாட்டில் மழையால் பேரழிவு: பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை! | Tamil Leader | We Lead the Nation