Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

‘பிரித்தானிய அரச பாதுகாப்புடன்தான் கட்டுநாயக்கவில் வந்திறங்கினேன்’

T

The Leader Desk

மார்ச் 27, 2025 • 2:20 PM

‘பிரித்தானிய அரச பாதுகாப்புடன்தான் கட்டுநாயக்கவில் வந்திறங்கினேன்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
  • மட்டக்களப்பில் இன்று (27) இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
  • பிரித்தானிய அரசாங்கத்தால் நான் 2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு அங்கு சிறைச்சாலையில் 8 மாதங்கள் இருந்தேன்.
  • “அப்போது, கண்டுபிடிக்காத குற்றத்தை இப்போது தான் பிரித்தானிய அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது.
எழுத்து அளவு:

பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (27) இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கியது உலகம் முழுக்க பேசு பொருளாக பார்க்கப்பட்டுள்ளது.  அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் கருணாவாகிய எனக்கு தடைவிதித்தது.

“நாங்கள் என்ன பிச்சையா எடுக்கப்போகின்றோம்? இவ்வளவு நாளும் இல்லாத தடையை கூட்டுச் சேர்ந்ததும் விதிக்கின்றனர். இது ஒரு அரசியலுக்கான நாடகம் தான். பிரித்தானிய அரசாங்கத்தால் நான் 2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு அங்கு சிறைச்சாலையில் 8 மாதங்கள் இருந்தேன்.

“அப்போது, கண்டுபிடிக்காத குற்றத்தை இப்போது தான் பிரித்தானிய அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது. எப்படியான ஒரு முட்டாள்தனமான அரசாங்கம். அந்தநேரம் கண்டுபிடித்து கையில் விலங்கை போட்டு கொண்டு சென்றிருக்கலாம்.

“ஆனால், அரச மரியாதையுடன் கட்டுநாயக்க விமான நிலையம் வரை என்னை பாதுகாப்புடன் கொண்டுவந்தார்கள். அப்படிப்பட்ட பிரித்தானிய அரசாங்கத்துக்கு இப்போது தான் கருணா பிழை செய்துள்ளார் என விளங்கியுள்ளது.

“ஆகவே, இது எல்லாம் கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கை. இதற்காக புலம் பெயர்ந்து வாழ்கின்ற சில அருவருடிகள் ஒத்துழைத்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...