Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நவம்பர் 27இல் வருகிறார் துவாரகா?: பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

T

The Leader Desk

நவம்பர் 21, 2023 • 5:17 AM

நவம்பர் 27இல் வருகிறார் துவாரகா?: பாதுகாப்பு அமைச்சு விளக்கம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருக்கின்றார் எனக் காண்பிப்பதற்கான காணொளியொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்று வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
  • இந்நிலையில், இது தொடர்பில் விளக்கத்தை அளித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • இந்தக் காணொலியைப் பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு நிதியைத் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்கு வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
எழுத்து அளவு:

மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருக்கின்றார் எனக் காண்பிப்பதற்கான காணொளியொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்று வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

மாவீரர் தினத்தை முன்னிட்டு ஒரு குழுவினர் நவம்பர் 27ஆம் திகதியன்று இந்தக் காணொளியை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதற்காக விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது என, கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் காணொலியைப் பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு நிதியைத் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்கு வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நெடியவன் என்கின்ற பேரிம்பநாயகம், நோர்வேயில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும் புலனாய்வு அமைப்புகள் அந்த முயற்சிகளை முறியடித்துள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் அந்த ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் விளக்கத்தை அளித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத், துவாரகா உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட வீடியோ தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

புலிகளின் மற்றொரு மலிவான முயற்சி என்பதால், அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், இந்த விடயம் தொடர்பாக தேவைப்பட்டால், அதற்கேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...