Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நவம்பர் 27ஆவது நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்! எம்.கே. சிவாஜிலிங்கம்

T

The Leader Desk

நவம்பர் 23, 2021 • 5:24 PM

நவம்பர் 27ஆவது நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்! எம்.கே. சிவாஜிலிங்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடக அமையத்தில், இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • "அந்த அனுமதி கிடைத்தவுடன், சுகாதாரத் துறையின் அனுமதியுடன், நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.
  • நவம்பர் 27ஆவது நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்" என்றார்.
எழுத்து அளவு:

யாழ். ஊடக அமையத்தில், இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மாவீரர் நாளை அனுஷ்டிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொலிஸார் மூலமும் படையினர் மூலமும் நீதிமன்றங்களை அணுகி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றது என்றார்.

இந்தச் சூழலில் பின்னணியிலேயே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூற முற்படுகின்றார் எனக் கூறி, தங்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள் எனவும் சில நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து இருக்கின்றன எனவும்,அவர் தெரிவித்தார்.

"மாவீரர் நினைவு தினங்கள் இடம்பெறும் துயிலுமில்லங்கள், தற்போது இராணுவ முற்றுகைக்குள் காணப்படுகின்றன. தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரிடம் கேட்டிருக்கின்றோம்.

"அந்த அனுமதி கிடைத்தவுடன், சுகாதாரத் துறையின் அனுமதியுடன், நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

"குறிப்பாக, அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் இதில் மௌனமாக இருக்காது துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செய்ய முன்வர வேண்டும்.

"தடை செய்யப்பட்ட பொருள்களை வைக்காமல், மாவீரர்களின் நினைவேந்தல் செய்வதை யாரும் தடுக்க முடியாது. நவம்பர் 27ஆவது நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நவம்பர் 27ஆவது நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்! எம்.கே. சிவாஜிலிங்கம் | Tamil Leader | We Lead the Nation