Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

13 குற்றச்சாட்டுகளின் கீழ் கெஹெலிய உட்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

T

The Leader Desk

ஜூன் 26, 2025 • 7:17 AM

13 குற்றச்சாட்டுகளின் கீழ் கெஹெலிய உட்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
  • தொடர்புடைய குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுகள் உள்ளன.
  • பின்னர், அந்த விசாரணை தொடர்பாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, அதில் 12 நபர்கள் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டனர்.
  • இந்த வழக்கில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், தரமற்ற தடுப்பூசிகளை விநியோகம் செய்த முதல் சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். தொடர்புடைய குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுகள் உள்ளன.

2022ஆம் ஆண்டில், நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற போர்வையில், சுகாதாரத் துறையின் ஏற்கனவே இருந்த கொள்முதல் நடைமுறைகளை மாற்றி, மருந்துகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்து புதிய மருந்துகளை கொள்வனவு செய்தது.

இவ்வாறு கொள்வனவு செய்த மருந்துகளில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் காணப்பட்டதோடு, அதனை செலுத்திக்கொண்ட கண்டி, மாத்தளை மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் மூவர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாகக் கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்தது. பின்னர், அந்த விசாரணை தொடர்பாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, அதில் 12 நபர்கள் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டனர்.

தரமற்ற தடுப்பூசிகளை விநியோகித்த சுதத் ஜனக பெர்னாண்டோ, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திர குப்தா மற்றும் சுகாதாரத் துறையில் உயர் அதிகாரிகள் குழு ஆகியோர் இதில் அடங்குவர்.

இந்த வழக்கில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், தரமற்ற தடுப்பூசிகளை விநியோகம் செய்த முதல் சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 19 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு இறுதியாக விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கையிட்டு தெரிவிக்கையில், தரமற்ற தடுப்பூசி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு வருடம், 8 மாதங்கள் மற்றும் 6 நாட்களாக நடத்திய விசாரணைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம தெரிவித்தார்.

அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளான மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையின்படி, 350 சாட்சிகளும் சுமார் 300 ஆவணங்களும் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...