Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ரயில்வே தொழில்நுட்ப நிபுணர்கள், ஆசிரிய விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்!

T

The Leader Desk

ஜூன் 26, 2025 • 3:31 AM

ரயில்வே தொழில்நுட்ப நிபுணர்கள், ஆசிரிய விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
  • அதன்படி, இன்று காலை 7 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பொதுஜன ரயில்வே ஊழியர் சங்கத்தின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்தார்.
  • பத்தொன்பது கல்விக் கல்லூரிகள், எட்டு ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் நூற்றுப் பன்னிரண்டு ஆசிரியர் அபிவிருத்தி நிலையங்களின் விரிவுரையாளர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் இணையவுள்ளதாக, இலங்கை கல்வியாளர் சேவைகள் விரிவுரையாளர்கள் நிபுணத்துவ சங்கத்தின் செயலாளர் எஸ்.எம்.
எழுத்து அளவு:

இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, இன்று காலை 7 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பொதுஜன ரயில்வே ஊழியர் சங்கத்தின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்தார்.

தங்கள் பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தேசிய கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி நிலையங்களின் விரிவுரையாளர்கள் இன்று (26) மற்றும் நாளைய (27) தினங்களில், சுகயீன விடுமுறையை அறிவித்து, பணிக்கு சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பத்தொன்பது கல்விக் கல்லூரிகள், எட்டு ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் நூற்றுப் பன்னிரண்டு ஆசிரியர் அபிவிருத்தி நிலையங்களின் விரிவுரையாளர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் இணையவுள்ளதாக, இலங்கை கல்வியாளர் சேவைகள் விரிவுரையாளர்கள் நிபுணத்துவ சங்கத்தின் செயலாளர் எஸ்.எம். பி. பண்டார தெரிவித்தார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவவுடன் கலந்துரையாடிய போதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதன்காரணமாக, தொழிற்சங்கம் முன்னரே தீர்மானித்தவாறு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...