Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அநுர அரசின் காணி சுவீகரிப்புக்கு எதிரான சுமந்திரனின் சட்ட ஆலோசனை தீவிரம்!

T

The Leader Desk

மே 26, 2025 • 6:41 AM

அநுர அரசின் காணி சுவீகரிப்புக்கு எதிரான சுமந்திரனின் சட்ட ஆலோசனை தீவிரம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த வர்த்தமானியை திரும்பப்பெறாவிடின் போராட்டங்களையும் நடத்துவோம்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
  • யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணிப் பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற சட்ட ஆலோசனை முகாமில் கலந்துகொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “காணி திணைக்களத்தால் 2025.03.28ஆம் திகதியன்று காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பில் மக்களுக்கான நீதி அமைப்பின் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
  • இதனால் பலர் தமது காணிக்குரிய ஆவணங்களை இழந்துள்ளனர்.
எழுத்து அளவு:

மேற்கொண்டுள்ளதோடு. இந்த வர்த்தமானியை திரும்பப்பெறாவிடின் போராட்டங்களையும் நடத்துவோம்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணிப் பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற  சட்ட ஆலோசனை முகாமில் கலந்துகொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணி திணைக்களத்தால் 2025.03.28ஆம் திகதியன்று காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பில் மக்களுக்கான நீதி அமைப்பின் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

“இந்த நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த பிரதேசத்தை அடையாளப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்தால் அப்பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் அல்லது உரிமை கோருபவர்கள் மூன்று மாத காலத்துக்குள் தமது காணிக்கான உரித்தை உறுதிப்படுத்த வேண்டும். காணி உரித்துக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

“வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1931ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணி உரித்து தொடர்பில் காணப்பட்ட பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட இடப்பெயர்வுகள் இடம்பெற்றன. இதனால் பலர் தமது காணிக்குரிய ஆவணங்களை இழந்துள்ளனர். அதேபோல் சுனாமி அனர்த்தத்தால் பலர் தமது ஆவணங்கள் மற்றும் உரித்துக்களை இழந்துள்ளனர்.

“இவ்வாறான பின்னணியில் அசாதாரன சூழல் தொடர்ந்து காணப்படுகின்ற நிலையில் மீள்குடியேற்றம் முழுமை பெறாத நிலையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் அகதிகளாக வாழ்கின்றனர்.

இவ்வாறு தீர்க்கப்படாத சிக்கல்கள் காணப்படுகின்ற சூழலில் காணி நிர்ணயச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிக மோசமானதொரு செயற்பாடு.

“காணி சுவீகரிப்புக்காகப் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வர்த்தமானியை அரசு மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

“அவ்வாறு இல்லாவிடின் மக்கள் போராட்டங்களையும் நடத்துவோம். தமது காணிகளை மக்கள் இழக்காமல் இருப்பதற்குரிய இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குகின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...