Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இங்கிலாந்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்கும்!

T

The Leader Desk

மார்ச் 26, 2025 • 2:54 PM

இங்கிலாந்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்கும்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளபடி, இங்கிலாந்து அரசாங்கம் நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளது.
  • இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயல்முறைக்கு உதவுவதில்லை, என்பதோடு மாறாக சிக்கலான நிலைக்குள்ளேயே உட்படுத்துகின்றன.
  • அவர்களில் மூன்று பேர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகள்.
எழுத்து அளவு:

“இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான இங்கிலாந்து தடைகள்" என்ற தலைப்பில் இங்கிலாந்து, வெளிநாட்டு கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) வெளியிட்ட மார்ச் 24, 2025 திகதியிட்ட செய்திக்குறிப்புக்கு பதிலளிக்கும் விதமாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளபடி, இங்கிலாந்து அரசாங்கம் நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளது. அவர்களில் மூன்று பேர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகள்.

அந்தவகையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் கடந்த காலங்களில் நிகழ்ந்த எந்தவொரு மனித உரிமை மீறல்களும் உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இது இங்கிலாந்து அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட "ஒருதலைப்பட்ச நடவடிக்கை" என்பதை வலியுறுத்த விரும்புவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயல்முறைக்கு உதவுவதில்லை,  என்பதோடு மாறாக சிக்கலான நிலைக்குள்ளேயே உட்படுத்துகின்றன.

மேலும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் குறித்த உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில், இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும். என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இங்கிலாந்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்கும்! | Tamil Leader | We Lead the Nation