Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பிரித்தானிய தடையின் பின் புதிய அவதாரம் எடுக்கப் போகும் ஷவேந்திர சில்வா!

T

The Leader Desk

மார்ச் 26, 2025 • 2:42 PM

பிரித்தானிய தடையின் பின் புதிய அவதாரம் எடுக்கப் போகும் ஷவேந்திர சில்வா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜயசூரிய, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த ஃபீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சு தடை விதித்திருந்தது.
  • பிரித்தானியா பொருளாதார தடை மற்றும் பயணத்தடை விதித்து 24 மணித்தியாலங்கள் கடந்த பின்னரும் கூட இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சோ அல்லது விசேடமாக இலங்கை அரசு சார்ந்து இருக்கக்கூடிய அமைச்சர்களோ எந்தவொரு நிலைப்பாடுகளையும் அறிவிக்கவில்லை.
  • யார் விகாரை அமைப்பதில் முன்னின்று செயற்படுகிறார்களோ அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரிதாக பார்க்கப்படுவார்கள்.
எழுத்து அளவு:

ஜயசூரிய, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த ஃபீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சு தடை விதித்திருந்தது.

பிரித்தானியா பொருளாதார தடை மற்றும் பயணத்தடை விதித்து 24 மணித்தியாலங்கள் கடந்த பின்னரும் கூட இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சோ அல்லது விசேடமாக இலங்கை அரசு சார்ந்து இருக்கக்கூடிய அமைச்சர்களோ எந்தவொரு நிலைப்பாடுகளையும் அறிவிக்கவில்லை.

எனினும், தென்னிலங்கையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் இது குறித்து கடுமையான எதிர்வினையாற்றி இருந்தார்கள்.

குறிப்பாக சரத் வீரசேகர, அன்று விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை பிரித்தானியா நிறுத்துமாறு கோரியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தாக்கியதன் விளைவாகத்தான் இன்று இந்த தடை இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தடை விதித்த நால்வரில் ஷவேந்திர சில்வா முக்கியமானவராக கருதப்படுகின்றார். ஏனெனில் தையிட்டி விகாரை அமைப்பதில் முன்னின்று செயற்பட்டவராக இவர் காணப்படுகின்றார்.

யார் விகாரை அமைப்பதில் முன்னின்று செயற்படுகிறார்களோ அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரிதாக பார்க்கப்படுவார்கள். அதைப்போலவே இங்கும் மேற்குலகமோ அநுர அரசோ எந்த நடவடிக்கையையும் எடுத்தாலும் அவருக்கான ஆதரவுத்தளம் அதிகமாகவே இருக்கும்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சி மாற்றம் செய்த போதும் சவேந்திர சில்வா அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட நிலையில் இருந்தார். ஆனால் தேவைக்கு அன்று அமெரிக்காவை வரை சவேந்திரசில்வாவை பயன்படுத்தி இருந்தது.

இவ்வாறாக ஷவேந்திர சில்வா மீது மேற்குலக நாடுகள் தடை விதித்துக் கொண்டிருக்கையில், அவருக்கான ஆதரவு சிங்கள் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கும்.

ஆதரவு அதிகரிக்கும் சூழலில் ஷவேந்திர சில்வா வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...