Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் உயிர்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு!

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2025 • 3:12 PM

கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் உயிர்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயிரையும் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார்.
  • “எங்களிடம் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
  • கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களின் மரணம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

உயிரையும் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார்.

கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களின் மரணம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

"இப்போது பலர், தேசிய பாதுகாப்பு பற்றி அதிகமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த நாட்டில் பாதாள உலகக் கோஷ்டிகளை உருவாக்க, வளர்க்க மற்றும் பராமரிக்க, பெருமளவான அரசியல்வாதிகள் தலையிட்டுள்ளனர். அதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. அவ்வாறு செய்துவிட்டு, பாதாள உலகக் கோஷ்டிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்போது, தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். தேசிய பாதுகாப்பின் அர்த்தம் கூட தெரியாமல். தங்களுக்கு ஒருவித பாதுகாப்பைப் பெறுவதற்காகவே அவர்கள் அதுபற்றி பேசுகிறார்கள்.

“எங்களிடம் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாதுகாப்பு இல்லாமல்தான் அவர்கள் நடமாடுகிறார்கள். தேசிய பாதுகாப்பு பற்றி, கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் அதிகளவில் கூச்சல் போட்டு வருகின்றன. இந்நாட்டில், தேசிய பாதுகாப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பொலிஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடுவார்கள். எங்களிடம் நல்ல புலனாய்வாளர்கள் உள்ளனர். உஸ்வெட்டகெய்யாவைப் போலவே, மித்தேனியவிலும் கொலைகள் நடந்தன. அந்தக் குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டனர்” என்று, அமைச்சர் மேலும் கூறினர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...