Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மகா சிவராத்திரி: 152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கிரக பெயர்ச்சி!

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2025 • 3:30 AM

மகா சிவராத்திரி: 152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கிரக பெயர்ச்சி!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
  • பிறந்திருக்கும் 2025ஆம் ஆண்டில் மகா சிவராத்திரியானது நாளைய தினம் நடக்கவுள்ளது.
  • அதே போன்று இந்நாளில் கிரகங்களின் தலைவனான சூரியனும், சனி பகவானும் கும்ப ராசியில் ஒன்றாக பயணிப்பார்கள்.
  • இப்படியான நிகழ்வுகள் சுமாராக 152 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.
எழுத்து அளவு:

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் இரவு சிவ பக்தர்கள் கண்விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். எனினும் இலங்கையின் கிழக்கே உள்ள திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள தென்கயிலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இவ்விழா ஆறு நாட்கள் இரவு கொண்டாடப்படுகின்றது.

சிவராத்திரி இரவிற்கு மறுநாள் இரவு தொடங்கி ஐந்து நாட்கள் இரவு முழுவதும் கோணேஸ்வரர் (கோணநாதர்) அன்னை மாதுமையாளுடன் திருக்கோணமலை நகரை வலம் (நகர்வலம்/ஊர்வலம்)வந்து அருள் புரிவார். இரவு முழுவதும் திருகோணமலை மக்கள் கண் விழித்திருந்து எம்பெருமானை வரவேற்று பூரண கும்பங்களை வைத்து வழிபடுவர்.

இத்தினங்களில் திருகோணமலை நகரம் முழுவதும் வாழை, தோரணம், மாவிலை, நந்திக்கொடி முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டு வர்ண விளக்குகளால் ஜொலிக்கும். எங்கும் சிவபெருமானின் பக்தி பாடல்கள் ஒலிக்கும். பட்டாசுகள் வானவேடிக்கைகள் நிகழ்த்தி இறைவனை வழிபடுவர். நடன, இசை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெறும்.

பிறந்திருக்கும் 2025ஆம் ஆண்டில் மகா சிவராத்திரியானது நாளைய தினம் நடக்கவுள்ளது. இந்த நாளில் சிவ பக்தர்கள் விரதம் இருந்து ஒரு நாள் இரவு முழுவதும் கண் விழித்து பிராத்தணை செய்வார்கள்.

ஜோதிடத்தின் படி, சற்று சிறப்பு நாளாக பார்க்கப்படும் இந்த நாளில் பல வருடங்களுக்கு பின் அரிய கிரக பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது.

அதுவும் குறிப்பாக, மகா சிவராத்திரி நாளில் அசுரர்களின் குருவான சுக்கிரன் மீன ராசியில் இருப்பார். அப்போது அந்த மீன ராசியில் ராகுவும் இருப்பார். இதனால் மீன ராசியில் ராகு, சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது.

அதே போன்று இந்நாளில் கிரகங்களின் தலைவனான சூரியனும், சனி பகவானும் கும்ப ராசியில் ஒன்றாக பயணிப்பார்கள்.

இப்படியான நிகழ்வுகள் சுமாராக 152 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். அந்த வகையில், அரிய பெயர்ச்சிகளால் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிவபெருமானின் செல்லபிள்ளைகளாக இருப்பார்களாம்.

அப்படியானவர்கள் என்னென்ன நட்சத்திரங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.    

1. மிருகசீரிஷம் 

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். அவர்களின் முயற்சிகள் அனைத்திற்கு சிவ பெருமான துணையாக இருப்பார். இந்த நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் வேலைகளில் வெற்றி பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கையில் பணக்கஷ்டங்கள் பெரிதாக வராது. எந்த துறையில் பணி புரிந்தாலும் ஈசனின் அருளால் உச்சத்தில் இருப்பார்கள்.

2. பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானுடன் தொடர் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஞானத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிவபெருமானை போன்று மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த அணைவரும் சிவபெருமானின் ஞானம், தன்னலமற்ற தன்மை மற்றும் மனிதகுலத்திற்கான சேவை ஆகிய பண்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.

3. விசாகம்

சிவபெருமானை போன்று இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஆழ்ந்த மாற்றங்களை விரும்பும் நபராக இருப்பார்கள். புறக்கணித்தல் மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றின் சக்திகளை உள்ளடக்கியுள்ளனர். அவர்களின் உணர்ச்சி ஆழம், சுயபரிசோதனை மற்றும் மாற்றும் திறன் ஆகியவற்றின் உள்ளார்ந்த குணங்கள் சிவபெருமானின் ஆற்றல்களுடன் ஒத்துப்போகின்றன. அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் சிவபெருமான் அவர்களை ஆசீர்வதிப்பார். எப்போதும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பார்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மகா சிவராத்திரி: 152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கிரக பெயர்ச்சி! | Tamil Leader | We Lead the Nation