Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

‘சாரா ஜஸ்மினை கடத்தியது யார்?; அநுர தலைமையில் விசாரணை வேண்டாம்!’

T

The Leader Desk

ஜூலை 25, 2025 • 1:08 PM

‘சாரா ஜஸ்மினை கடத்தியது யார்?; அநுர தலைமையில் விசாரணை வேண்டாம்!’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
  • இதனையடுத்து நாடாளுமன்றில் சற்று சலசலப்பு ஏற்பட்டிருந்தது.
  • அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் சம்பவம் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜெயசேகரவே இருந்தார்.
எழுத்து அளவு:

முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் சம்பவம் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜெயசேகரவே இருந்தார். எனவே அவரின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல் விடுத்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது அவர்களின் பிரச்சினை. அது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் உயிர்த்த ஞாயிறு தொடர்பில் நாட்டு மக்களுக்கு நீதியான முறையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நாடாளுமன்றில் சற்று சலசலப்பு ஏற்பட்டிருந்தது.

மேலும், அநுர ஜெயசேகர கிழக்கு மாகாணத்தின் கட்டளைத் தளபதியாக இருக்கும் போது தான் சாய்ந்தமருதில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. அதன் போதே அங்கு முதலாவது இராணுவ குழு சென்றது என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தில் பொலிஸ் பாதுகாப்பு அமைச்சரும் அன்று சாராவின் மூன்றாவது டி.என்.ஏ பரிசோதனை தான் பொருந்துவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது சாரா தொடர்பில் தெரியாது எனக் கூறுகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதனை நாம் வரவேற்கின்றோம். இந்த விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக இருக்கின்றோம் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...