Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட மலையக அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!

T

The Leader Desk

ஜூலை 25, 2025 • 12:19 PM

ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட மலையக அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என சில ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
  • “இந்நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதம் என்பன அதிகாரத்துக்காக பயன்படுத்தப்பட்டன.
  • மலையகத்திலுள்ள கட்சிகளுடன் எமக்கு எவ்வித டீலும் கிடையாது.
எழுத்து அளவு:

இணக்கப்பாடு உள்ளதா? என சில ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மலையகத்திலுள்ள கட்சிகளுடன் எமக்கு எவ்வித டீலும் கிடையாது. ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தனக்குரிய கடமையை நிறைவேற்றும்” என்று, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

செம்மணி புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப்பணி மற்றும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது என்றும் அவர் கூறினார்.

ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

"ஐக்கிய தேசியக் கட்சியாலேயே அன்று கறுப்பு ஜூலைக் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. நிலைமை இவ்வாறு இருக்க, ஜே.வி.பியினரே தமிழர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர் என்ற மிகவும் சூட்சுமமான முறையில் போலிப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

“செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பூரண விசாரணைக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றது.

“இந்நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதம் என்பன அதிகாரத்துக்காக பயன்படுத்தப்பட்டன. ஊழல், மோசடிகளை மூடிமறைப்பதற்கான அவை பயன்படுத்தப்பட்டன. எனினும், இந்நாட்டில் இனி இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது. அரசியல் அதிகாரத்துக்காக இனவாதம், மதவாதத்தை பயன்படுத்த இடமளிக்கமாட்டோம்.

“புதிய கலாசாரம், முறைமை மாற்றம், சமூக மாற்றம் என்பவற்றுக்காகவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். எமக்கென தெளிவான பாதை உள்ளது. அந்த வழியில் மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். மக்கள் எதிர்பார்க்கும் இலங்கை நிச்சயம் உருவாக்கப்படும்" - என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...