Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ராஜிதவின் மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

T

The Leader Desk

ஜூலை 25, 2025 • 12:02 PM

ராஜிதவின் மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்யக் கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மனுவை விசாரிக்க மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்மானித்தது.
  • அதன்படி, மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை ஒகஸ்ட் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
  • இதனால், நீதவானின் உத்தரவு பிணைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது எனவும், அதை திருத்தி தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தைக் கோரினார்.
  • அதன்படி, மனு ஒகஸ்ட் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
எழுத்து அளவு:

மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்யக் கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த மனுவை விசாரிக்க மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்மானித்தது.

அதன்படி, மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை ஒகஸ்ட் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த மனு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா காலிங்கவங்ச முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராஜித சேனாரத்ன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, தனது கட்சிக்காரர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு முன்பிணை கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், ஆனால் அந்த மனு நீதவானால் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நீதவான், பிணை மனுவை நிராகரித்ததற்கான காரணங்களைத் தெளிவாக முன்வைக்கவில்லை என சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இதனால், நீதவானின் உத்தரவு பிணைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது எனவும், அதை திருத்தி தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தைக் கோரினார்.

மேலும், இந்த மனு தொடர்பான விசாரணைகள் முடியும் வரை, தனது கட்சிக்காரரை கைது செய்வதைத் தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன கோரிக்கை விடுத்தார்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு மட்டும் உத்தரவிட்டார். அதன்படி, மனு ஒகஸ்ட் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ராஜிதவின் மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்! | Tamil Leader | We Lead the Nation