Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

City of Dreams திறப்பு விழா; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் வருகிறார்!

T

The Leader Desk

ஜூலை 25, 2025 • 2:52 AM

City of Dreams திறப்பு விழா; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் வருகிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிகழ்வுக்காக போலிவூட் முன்னணி நட்சரத்திரம் ஹிருத்திக் ரோஷன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
  • இந்த நிகழ்வு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
  • சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் அதிகாரப்பூர்வ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 2 அன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

நிகழ்வுக்காக போலிவூட் முன்னணி நட்சரத்திரம் ஹிருத்திக் ரோஷன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

முன்னதாக திறப்பு விழாவில் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும், பின்னர் எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்தினர். இந்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன், ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் இணைந்து உருவாக்கிய மெகா திட்டத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு நிகழ்வில் இப்போது கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

இந்த நிகழ்வு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த திட்டம் உலகத் தரம் வாய்ந்த, அதி-ஆடம்பரமான நுவா ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை இதில் அடங்கும்.

இது இன்றுவரை இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறை துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாக அமைகிறது.

கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலை நிறுத்துவதில் இந்த தொடக்க விழா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் அதிகாரப்பூர்வ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 2 அன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...