Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

‘அணையா தீபம்’ போராட்டக் களத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அமைச்சர் சந்திரசேகரன்!

T

The Leader Desk

ஜூன் 25, 2025 • 11:40 AM

‘அணையா தீபம்’ போராட்டக் களத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அமைச்சர் சந்திரசேகரன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.
  • மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் இரவு பகலாக நடைபெற்று மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
  • மதியம் 1 மணி அளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர்.
  • மேலும் அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.
எழுத்து அளவு:

பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் இரவு பகலாக நடைபெற்று மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய இன்று காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்தும் அணையா விளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர்.

மதியம் 1 மணி அளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர். இதன் பொழுது போராட்டகாரர்களால் யாழ். மாவட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டார்.

மேலும் அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதேவேளை விரைவாக குறித்த இடத்தை விட்டு சந்திரசேகரன் வெளியேறினார்.

இதேபோன்று அப்பகுதிக்கு சென்ற இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

குறித்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சென்றவேளை அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அவரை ஒருமையில் விழித்து கூச்சலிட்டு அந்தப் பகுதியில் இருந்து அவரை விரட்டியடித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை,போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோர் வருகைத் தந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடும் அதிருப்தியடைந்து முரண்பட ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...