Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

உலக அழகிப் போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து அழகி: ‘விலைமாது, குரங்கைப்போல உணர்ந்தேன்’ எனக் குற்றச்சாட்டு!

T

The Leader Desk

மே 25, 2025 • 5:32 AM

உலக அழகிப் போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து அழகி: ‘விலைமாது, குரங்கைப்போல உணர்ந்தேன்’ எனக் குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றஞ்சாட்டியுள்ளார்.
  • தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72ஆவது உலக அழகிப் போட்டி (Miss World) நடைபெற்று வருகிறது.
  • மே 10ஆம் திகதி தொடங்கிய இப்போட்டி, மே 31 வரை நடைபெறவுள்ளது.
  • இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கின்றனர்.
எழுத்து அளவு:

இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72ஆவது உலக அழகிப் போட்டி (Miss World) நடைபெற்று வருகிறது. மே 10ஆம் திகதி தொடங்கிய இப்போட்டி, மே 31 வரை நடைபெறவுள்ளது. இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து நாடு சார்பாக பங்கேற்ற அந்நாட்டு அழகி மில்லா மேகி, போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாகக் கூறி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தெலங்கானாவுக்கு மே 7ஆம் திகதி வந்தடைந்த மில்லா, மீண்டும் மே 16ஆம் திகதியன்றே இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக, நாடு திரும்புவதாகக் கூறிச் சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து, அந்நாடு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள மில்லா கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அதில் கூறியுள்ளதாவது,

“உலக அழகிப் போட்டியில், போட்டியாளர்கள் 24 மணிநேரமும் ஒப்பனையுடனும், கண்கவர் ஆடைகளுடனும்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தொடர்ந்து, போட்டியில் 6 விருந்தினர்கள் கொண்ட ஒவ்வொரும் மேசையிலும் 2 பெண்கள் அமர்த்தப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம்.

“என்னால் இதை நம்ப முடியவில்லை. இது மிகவும் தவறானது. வித்தைக் காட்டும் குரங்குகளைப்போல அங்கு அமர்ந்திருந்தோம். அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை. சுரண்டப்படுவதற்காக யாரும் இங்கு வரவில்லை.

“உலக அழகிப் பட்டத்துக்கென ஒரு தனிமதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அங்கு நான் ஒரு விலைமாதுவாக உணர்ந்தேன். ஆகையால்தான், ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்களை ஊக்குவிக்கவும் போட்டியில் இருந்து விலகினேன். இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மில்லாவின் குற்றச்சாட்டை மறுத்த போட்டி அமைப்பான மிஸ் வேர்ல்ட், “ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளை மில்லா பரப்பி வருகிறார். போட்டியின்போதான அவரின் மகிழ்ச்சி, நன்றியுரைகள், பாராட்டை வெளிப்படுத்தியது தொடர்பான எடிட்டிங் செய்யப்படாத விடியோக்களும் வெளியிடப்படும்” என்று தெரிவித்தனர்.

போட்டியில் இருந்து வெளியே செல்வதாக மில்லா கூறியதையடுத்து, அவருக்கு பதிலாக இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது அழகியான சார்லோட் கிராண்ட் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உலக அழகிப் போட்டியில் இருந்து விலகிய இங்கிலாந்து அழகி: ‘விலைமாது, குரங்கைப்போல உணர்ந்தேன்’ எனக் குற்றச்சாட்டு! | Tamil Leader | We Lead the Nation