Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அர்ச்சுனா - இளங்குமரன் எம்.பிக்களின் குடும்பச் சண்டையால் களேபரமான யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

T

The Leader Desk

மார்ச் 25, 2025 • 9:01 AM

அர்ச்சுனா - இளங்குமரன் எம்.பிக்களின் குடும்பச் சண்டையால் களேபரமான யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி யாழ்.
  • குறிப்பாக இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் பெண்களை ஏமாற்றிய கட்சிகள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் குடும்பச் சண்டையில் அவர்கள் ஈடுபட்டனர்.
  • மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் திடீரென வெளியேறியுள்ளார்.
எழுத்து அளவு:

ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லாமையை சுட்டிக்காட்டி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் திடீரென  வெளியேறியுள்ளார்.

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனிப்பட்ட விடயத்தை முன்னிறுத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டது.

வலி வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடயம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தியதாக மாறியது.

குறிப்பாக இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் பெண்களை ஏமாற்றிய கட்சிகள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் குடும்பச் சண்டையில் அவர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த விவாதத்தை இடைநிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரிடம் வலியுறுத்தினார்.

ஆனால் ஒருங்கிணைப்புக் குழுத்  தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்த முடியாது ஆழுமையற்றவராக காணப்பட்டார்.

இதன் காரணமாக ஒருங்கிணைப்புக் குழுத்  தலைவரின் நிலையை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயலாளரும் மாவட்ட அரச அதிபருமான பிரதீபன், வடக்கின் ஆளுநர் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், ரஜீவன், அர்ச்சுனா, பவானந்தராஜா, இளங்குமரன் மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது,  நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்திக்கான திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும்,  பாதீட்டில் வடக்கிற்காக அறிவிக்கப்பட 5 ஆயிரம் மில்லியன் உத்தேச ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகளின் அபிவிருத்தி, மழை நீர் சேகரிப்பு திட்டம், குடி நீர், போக்குவரத்து, வீட்டுத்திட்டம், சட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இந்தக் கூட்டத்திற்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அர்ச்சுனா - இளங்குமரன் எம்.பிக்களின் குடும்பச் சண்டையால் களேபரமான யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! | Tamil Leader | We Lead the Nation