Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா நாட்டை விட்டு ஓடிவிட்டாரா?

T

The Leader Desk

பிப்ரவரி 25, 2025 • 10:38 AM

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா நாட்டை விட்டு ஓடிவிட்டாரா?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனப்படும் கணேமுல்லே சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி இன்னும் நாட்டில் இருப்பதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • கணேமுல்ல சஞ்சீவ, கடந்த 19ஆம் திகதியன்று புதுக்கடை எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • பிரதான சந்தேகநபருக்கு, நீர்கொழும்பு - கட்டுவெல்லேகமவில் வசிக்கும் 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணே துப்பாக்கியை வழங்கியுள்ளார் என்று அடையாளம் காணப்பட்டார்.
  • குற்றச் செயலில் ஈடுபட்ட பிறகு அப்பெண் காணாமல் போனார்.
எழுத்து அளவு:

எனப்படும் கணேமுல்லே சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி இன்னும் நாட்டில் இருப்பதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.

மேற்படி குற்றவாளியான இஷாரா செவ்வந்தி, நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று கருதப்படும் ஒவ்வொரு இடத்திலும் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவ, கடந்த 19ஆம் திகதியன்று புதுக்கடை எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதான சந்தேகநபருக்கு, நீர்கொழும்பு - கட்டுவெல்லேகமவில் வசிக்கும் 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணே துப்பாக்கியை வழங்கியுள்ளார் என்று அடையாளம் காணப்பட்டார்.

குற்றச் செயலில் ஈடுபட்ட பிறகு அப்பெண் காணாமல் போனார். இப்போது அவரைக் கைது செய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இருப்பினும், இன்று காலை அவரது தாயாரும் தம்பியும் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

48 மற்றும் 23 வயதுடைய இருவரும் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஒரு கொலை குறித்து தெரிந்திருந்தும், அது குறித்த தகவலை மறைத்து, குற்றத்திற்கு உதவியதாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...