Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பாதாள குழுக்கள் பற்றி பாதுகாப்புக் கருதி தகவல் வெளியிட முடியாது!

T

The Leader Desk

பிப்ரவரி 25, 2025 • 10:22 AM

பாதாள குழுக்கள் பற்றி பாதுகாப்புக் கருதி தகவல் வெளியிட முடியாது!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வருவதாகக் குறிப்பிட்ட ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்புக் காரணம் கருதி விசாரணை முடிவுகளை வெளிப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதால் தகவல்களை பாராளுமன்றத்துக்கு தெரிவித்து, விசாரணைகளைக் குழப்ப முடியாது.
  • மேலதிக தகவல் தேவையென்றால் எதிர்வரும் (28) பாதுகாப்பு அமைச்சினதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினதும் செலவு தலைப்பு மீதான விவாதம் இடம்பெறுகிறது.
எழுத்து அளவு:

வருவதாகக் குறிப்பிட்ட ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்புக் காரணம் கருதி விசாரணை முடிவுகளை வெளிப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை சபையில் தெரிவித்த அவர்,  இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ளுமாறும் எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில்  மேலும் தெரிவித்த அவர், பாதாளக் குழுக்களுக்கு மத்தியில் இடம்பெறும்  மோதல்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது.மக்களின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் உச்சளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குழுக்களுக்கிடையில் இடம்பெறும் மோதல் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஏற்கனவே சபையில் தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சுசார் ஆலாேசனைக் குழுவில் ஜனாதிபதியும்  இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதால் தகவல்களை பாராளுமன்றத்துக்கு தெரிவித்து, விசாரணைகளைக் குழப்ப முடியாது.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் குறிப்பிடப்படும் பொலிஸார், மற்றும் பாதுகாப்புத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அத்துடன் நீதிமன்றத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடமும் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க தேவையான தகவல்களை மாத்திரம் அடிக்கடி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலதிக தகவல் தேவையென்றால் எதிர்வரும் (28) பாதுகாப்பு அமைச்சினதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினதும் செலவு தலைப்பு மீதான விவாதம் இடம்பெறுகிறது.

அதன் போது அறிந்து கொள்ளலாம். அப்போது விசாரணைகளுக்கு பாதிப்பில்லாத தகவல்களை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...