Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

திசைக்காட்டியின் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஐ.ம.ச தீர்மானம்

T

The Leader Desk

பிப்ரவரி 25, 2025 • 10:00 AM

திசைக்காட்டியின் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஐ.ம.ச தீர்மானம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று (25) வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
  • வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
  • ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகின்ற வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
  • இன்று (25) நடைபெறும் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.
எழுத்து அளவு:

செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று (25) வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார்.

2025 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. 7ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகின்ற வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இன்று (25) நடைபெறும் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும்,  குறிப்பாக  வரிக் குறைப்பு, மருந்து பொருட்களின் விலைக் குறைப்பு, ஐஎம்எப் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை நிறைவேற்றவில்லை எனவும், அத்துடன் அரச பணியாளர்களையும் ஏமாற்றியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய காரணங்களால் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சியான  தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...