1200 x 80 DMirror

 
 

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பாக இன்று (23) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் LNW க்கு கருத்து தெரிவித்த தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் பிரதிநிதி, மங்கள சமரவீர செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகியதே இந்த வெற்றிக்கு மிகமுக்கிய காரணம் என்று கூறினார்.

இதை Tamils for conservative தலைவர் கலாநிதி அர்ஜுன் சிவானந்தன் தெரிவித்தார்.

மங்கள சமரவீர வெளியுறவு அமைச்சராக இருந்திருந்தால், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

குறைந்த பட்சம் அவர் நடைமுறை அரசியலில் இருந்திருந்தால் கூட, வாக்களிப்பில் கலந்துகொண்ட பல நாடுகளின் நிலைப்பாட்டை அவரால் மாற்ற முடிந்திருக்கும்.

2016 முதல்,  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர், ஆனால் மங்கள சமரவீரவின் தலையீட்டால், புலம்பெயர் தமிழர்கள் அந்த வெற்றியை அடையத் தவறிவிட்டனர்.

Mangala UN

புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் எழுப்பும் ஒவ்வொரு பிரச்சினையையும் சமாளிக்க மங்கள சமரவீர தனது தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தினார் என்று அர்ஜுன் சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றது உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த  புலம்பெயர் தமிழர்களுக்கஞம் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்றும் அவர் கூறினார்.

 அவர் ஓய்வு பெற்றதற்கு  புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சரும் அல்லது இராஜதந்திரியும் மங்கள சமரவீர ஆற்றிய பங்கை நெருங்க முடியாது என்றும், இது இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் புலம்பெயர்ந்தோரின் நன்மைக்காக அமைந்தது என்றும் சிவானந்தன் சுட்டிக்காட்டினார்.

(ஆதாரம் - lankanewsweb.net)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி