Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மனைவி, மாமியார், மைத்துனி மீது பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவர்; மொரட்டுவையில் சம்பவம்‘

T

The Leader Desk

ஜூன் 24, 2025 • 3:31 PM

மனைவி, மாமியார், மைத்துனி மீது பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவர்; மொரட்டுவையில் சம்பவம்‘

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மீது பெற்றோல் ஊற்றித் தீயிட்ட சம்பவமொன்று மொரட்டுவ – லுனாவ பிரதேசத்தில் இன்று (24) இடம்பெற்றுள்ளது.
  • இரண்டு பிள்ளைகளின் தாயான சந்தேகநபரின் மனைவி (28) மற்றும் மனைவியின் தாய் மற்றும் மைத்துனி ஆகியோரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
  • சம்பவத்தில் பாதிகப்பட்ட மனைவி, வெளிநாட்டிலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கைக்குத் திரும்பிய நிலையில், மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராகியுள்ளார் என்றும் கணவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், இந்தப் பிரச்சினை நீதிமன்றம் வரை எட்டியதாகக் கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

மீது பெற்றோல் ஊற்றித் தீயிட்ட சம்பவமொன்று மொரட்டுவ – லுனாவ பிரதேசத்தில் இன்று (24) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தீக்காயங்களுக்கு ஆளான மேற்படி பெண்கள் மூவரும், பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு பிள்ளைகளின் தாயான சந்தேகநபரின் மனைவி (28) மற்றும் மனைவியின் தாய் மற்றும் மைத்துனி ஆகியோரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாகவே இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பாதிகப்பட்ட மனைவி, வெளிநாட்டிலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கைக்குத் திரும்பிய நிலையில், மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராகியுள்ளார் என்றும் கணவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், இந்தப் பிரச்சினை நீதிமன்றம் வரை எட்டியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, அனைவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரின் மனைவி மற்றும் மாமியார் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சந்தேகநபர் தனது மனைவி மீது “அசிட் வீசுவேன் அல்லது வெளிநாடு செல்வதைத் தடுப்பேன்” என்று பலரிடம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் ஒரு சிவில் பாதுகாப்பு வீரர் என்றும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மனைவி, மாமியார், மைத்துனி மீது பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவர்; மொரட்டுவையில் சம்பவம்‘ | Tamil Leader | We Lead the Nation