Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

‘மனித உரிமைச் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த பார்வை தேவை!’

T

The Leader Desk

ஜூன் 24, 2025 • 2:54 PM

‘மனித உரிமைச் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த பார்வை தேவை!’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வோல்கர் துர்க் (Volker Türk) கலந்து கொண்டார்.
  • இந்த சந்திப்பின்போது, மனித உரிமை சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த பார்வை தேவையென்பதை திரு.
  • இச்சந்திப்பில் பெரும்பாலான முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
எழுத்து அளவு:

உரிமை உயர் ஆணையர் திரு. வோல்கர் துர்க் (Volker Türk) கலந்து கொண்டார். இச்சந்திப்பில் பெரும்பாலான முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

இந்த சந்திப்பின்போது, மனித உரிமை சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த பார்வை தேவையென்பதை திரு. துர்க் வலியுறுத்தினார்.

குறிப்பாக, கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாதம், வன்முறைகள் மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் வாழும் பகுதிகளில், சமூக மற்றும் பொருளாதார மேம்பாடுகள் முன்னேற வேண்டிய அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் தொடர்பான அணுகுமுறைகள் சமூகவியல் நுட்பத்துடனும், அளவீட்டு நேர்மையும், சமூக நீதி மற்றும் பூரணப் பங்கேற்பும் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி கருத்து தெரிவிக்கையில், நாட்டில் நிலையான நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக மக்களாட்சி வலுவூட்டல் மற்றும் அதிகாரப் பகிர்வின் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலைநாடு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது மாகாண பிரதிநிதிகள் ஊடாக அரசியல் அதிகாரம் செலுத்தும் உரிமையை பெற வேண்டும் என்றும், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், கடந்த காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனவாத சம்பவங்கள் தொடர்பாக ஆழமான கவலையையும், சர்வதேச பொறுப்பேற்கும் பண்புகள் (accountability mechanisms) பற்றிய அவசியத்தையும் எடுத்துரைத்தனர்.

இந்த சந்திப்பு, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, மனித உரிமை தொடர்பான சவால்கள், போருக்குப் பிறகு சமூகங்களின் மீட்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் மீதான ஐ.நா பார்வையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்திருந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி தெரிவித்தார்.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Unhcr_2.jpeg

 

Unhcr_1.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...